கோவை மாவட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் காவல்துறையை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் - 5000 பேர் கைது!

கோவை: கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் உட்பட 5000 பேர் கைது செய்யப்பட்டனர்.



கோவை: கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் உட்பட 5000 பேர் கைது செய்யப்பட்டனர். 

கோவை மாவட்டத்தில் திமுகவினர் மீது தொடர்ந்து வழக்குகள் போடும் காவல்துறையை கண்டித்து இன்று மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி அலுவலகங்கள் முன்பாக கோவை மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் தனி மனித இடைவெளி விட்டு திமுகவினர் காவல் துறையை கண்டித்தும், அமைச்சர் வேலுமணியை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.எல்.ஏ கார்த்திக் தெரிவித்ததாவது:-

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தனி அலுவலரால் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மாநகராட்சி இணையதளத்தில் ஏற்கப்படுவதில்லை எனவும் இது குறித்து கேள்வி எழுப்பியதற்காக தன் மீது காவல்துறை மூலம் வழக்கு போடப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

இதே போன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக திமுக தெற்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கோவையில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தூண்டுதலின் பேரிலேயே காவல்துறையினர் இதுபோன்ற வழக்குகளை பதிவு செய்ததாக குற்றம் சாட்டிய அவர், உடனடியாக திமுக மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மேலும், திமுகவினர் மீது பொய் வழக்குகள் போடப்படுவது தொடர்ந்தால், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தெரிவித்தார். 



இதனை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உட்பட 5000 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல, கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட வால்பாறை, பொள்ளாச்சி, சிறுமுகை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பகுதிகளிலும் அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். 



இதேபோல, கோவை பீளமேட்டில், திமுக இளைஞரணி துணைச் செயலாளர் டி.செந்தமிழ் செல்வன் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வார்டு செயலாளர் பாலசுப்பிரமணியம், எஸ்.எம்.சுதாகர், பீளமேடு இளைஞர் பிரிவு துணை செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும், கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சி.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தொண்டாமுத்தூர் திமுக மைய செயலாளர் மருதமலை சேனாதிபதி உள்ளிட்டோர் திமுக உறுப்பினர்களை கைது செய்வது 'ஜனநாயக விரோதமானது' என்றும் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.









Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...