கோவை தியாகி குமரன் மார்க்கெட்டிற்கு வரும்‌ பொதுமக்கள்‌, கடை உரிமையாளர்கள்‌ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்‌ குறித்து மாநகராட்சி ஆணைய‌ர் ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ தியாகி குமரன் மார்க்கெட்டிற்கு வரும்‌ பொதுமக்கள்‌ மற்றும்‌ கடை உரிமையாளர்கள்‌ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும்‌ தனி அலுவலா்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ மார்க்கெட்‌ வியாபாரிகள்‌, மற்றும்‌ அதிகாரிகளுடன்‌ கலந்தாய்வுக்கூட்டம்‌ நடைபெற்றது.

கோவை: கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ தியாகி குமரன் மார்க்கெட்டிற்கு வரும்‌ பொதுமக்கள்‌ மற்றும்‌ கடை உரிமையாளர்கள்‌ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும்‌ தனி அலுவலா்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ மார்க்கெட்‌ வியாபாரிகள்‌, மற்றும்‌ அதிகாரிகளுடன்‌ கலந்தாய்வுக்கூட்டம்‌ நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ மற்றும்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ஆகியோர்‌ தெரிவித்ததாவது:

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட தியாகி குமரன்‌ மார்க்கெட்‌ பொதுமக்கள்‌ அதிகம்‌ கூடும்‌ இடங்களில்‌ ஒன்றாகும்‌. இப்பகுதியில்‌ உள்ள கடை உரிமையாளர்கள்‌ மற்றும்‌ வியாபாரிகள்‌ கட்டாயம்‌ போதிய சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும்‌.

அதேபோல, மார்க்கெட்டிற்கு வரும்‌ வாடிக்கையாளர்கள்‌ அனைவரும்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிவதை உறுதி செய்ய வேண்டும்‌. வியாபாரிகள்‌ கிருமிநாசினி கொண்டு கைகளை நன்றாக சுத்தம்‌ செய்து கொள்ள வேண்டும்‌. கடை உரிமையாளர்கள்‌ மற்றும்‌ வியாபாரிகள்‌ தங்களது கடைக்கு வரும்‌ பொதுமக்களை போதிய சமூக இடைவெளியினை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும்‌.

மேலும்‌, மாநகராட்சியால்‌ வழங்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றாமல்‌ செயல்படும்‌ கடை உரிமையாளர்கள்‌ மற்றும்‌ வியாபாரிகள்‌ மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில்‌, மார்க்கெட்‌ கடை உரிமையாளர்கள்‌, நிர்வாகிகள்‌ மற்றும்‌ அதிகாரிகள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...