நீலகிரியில் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிப்பவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

நீலகிரி: நீலகிரியில் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிப்பவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நிவாரண உதவிகளை வழங்கினார்.

நீலகிரி: நீலகிரியில் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிப்பவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நிவாரண உதவிகளை வழங்கினார்.

கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி, பொன்வயல் பகுதியில் இருந்து சென்னை சென்று ஊரடங்கு தளர்வுக்குப் பின் கடந்த 25ம் தேதி நீலகிரி திரும்பிய குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக கோவை அழைத்துச் செல்லப்பட்டார்.

இதையடுத்து, அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள 26 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவத் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இப்பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு அரசு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இப்பகுதியில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, அங்குள்ள நிலைமை குறித்து சுகாதார அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து, அங்குள்ள குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். அப்போது பேசிய அவர், பாதிக்கப்பட்ட பெண் நலமடைந்து வருவதாகவும் பொன்வயல் கிராமத்தில் யாருக்கும் தொற்று பரவவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கும் தொற்று அறிகுறி இல்லை என்றும் மருத்துவ துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வின் போது கூடலூர் ஆர்டிஓ ராஜ்குமார், தாசில்தார் சங்கீதாராணி, பந்தலூர் நகராட்சி ஆணையர் லீனா சைமன் மற்றும் மருத்துவ துறை, வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...