தமிழக தனியார் மருத்துவமனைகளில் லேசான பாதிப்புள்ள கொரோனா நோயாளிக்கு சிகிச்சையளிக்க ஒரு நாளைக்கு ரூ.23 ஆயிரம் கட்டணம் வசூலிக்க பரிந்துரை!

சென்னை: தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் லேசான பாதிப்புள்ள கொரோனா நோயாளிக்கு சிகிச்சையளிக்க ஒரு நாளைக்கு ரூ.23 ஆயிரம் கட்டணம் வசூலிக்க தமிழக அரசுக்கு ஐஎம்ஏ தமிழகபிரிவு பரிந்துரை செய்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் லேசான பாதிப்புள்ள கொரோனா நோயாளிக்கு சிகிச்சையளிக்க ஒரு நாளைக்கு ரூ.23 ஆயிரம் கட்டணம் வசூலிக்க தமிழக அரசுக்கு ஐஎம்ஏ தமிழக பிரிவு பரிந்துரை செய்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களிடம் ஆரம்பகட்ட பரிசோதனையில் தொடங்கி, நோய் குணமாகும் வரை தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் செலுத்த மறுக்கும் நோயாளிகளை பாதியிலேயே திருப்பி அனுப்பும் கொடுமையும் நடக்கிறது.

மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மற்ற மாநிலங்கள் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்கள் தொடர்பாக வழிகாட்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.

எனவே, கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க தமிழக அரசு கட்டணங்களை வரைமுறைப்படுத்தி வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தது.

இதனை நேற்று விசாரித்த உயர்நீதிமன்றம், கொரோனா சிகிச்சை கட்டணம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை தமிழக அரசுக்கு ஐ.எம்.ஏ தமிழப்பிரிவு பரிந்துரை செய்துள்ளது.

அதில், லேசான பாதிப்புள்ள கொரோனா நோயாளிக்கு ஒரு நாளைக்கு ரூ.23,000 வரை வசூலிக்கவும், அதிக பாதிப்புள்ள கொரோனா நோயாளிக்கு ஒரு நாளைக்கு ரூ.43,000 வசூலிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.

லேசான பாதிப்புள்ள கொரோனா நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை கட்டணமாக சுமார் ரூ.2,31,820 வசூலிக்க இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு பரிந்துரை செய்துள்ளது.

அதேபோல, தீவிர பாதிப்புள்ள கொரோனா நோயாளிக்கு 17 நாட்கள் சிகிச்சை கட்டணமாக சுமார் ரூ.4,31,411 வசூலிக்க பரிந்துரை செய்துள்ளது.

மேலும், மருத்துவ பணியாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.9,600 வரை வசூலிக்கலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...