வால்பாறையில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை..! தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி!

கோவை: வால்பாறையில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை: வால்பாறையில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு வார காலமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று வால்பாறையில் 5 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

இதேபோல, சோலையார் அணை பகுதியில் 14 மி,மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சின்னகல்லாரில் 7 மி.மீட்டர் மழையும், நீரார் அணையில் 6 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், இன்றும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வரும் நிலையில், வானம் மேகமூட்டத்துடன் உள்ளது.



இதன் காரணமாக கூழாங்கல் ஆறு நடுமலை ஆறு மற்றும் சிற்றோடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. 165 அடி உயரமுள்ள சோலையார் அணையில் இன்று காலை நிலவரப்படி 48.12 அடி நீர் உள்ளது. அணைக்கு 75 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. நீர் வெளியேற்றம் இல்லை.

அதேபோல, மிதமான மழை காரணமாக வால்பாறை பகுதியில் தேயிலை தோட்டங்களில் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...