சென்னையிலிருந்து உதகை வந்த எம்பி ராசா; ஏழு நாட்கள் தனிமை படுத்திக்கொள்ள, சுகாதாரத்துறை அறிவுரை

நீலகிரி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு முன் நீலகிரி எம்பி ஆ ராசா அடிக்கடி உதகை வந்து அவர் தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து வந்தார்.


நீலகிரி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு முன் நீலகிரி எம்பி ஆ ராசா அடிக்கடி உதகை வந்து அவர் தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து வந்தார்.

இந்த நிலையில், கொரோனா வேகமாக பரவியதையடுத்து நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தபட்டது. இதனால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு, வெளியூர்வாசிகள் யாரும் அனுமதிக்கபடவில்லை. இந்த நிலையில், ஜூன் 1-ம் தேதி முதல் தளர்வுகள் அறிவிக்க பட்டதையடுத்து, நீலகிரி மாவட்ட எம்பி மற்றும் முன்னால் மத்திய அமைச்சருமானா ஆ.ராசா நீலகிரி இ-பாஸ் பெற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்று ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கபட்டது. பின்னர், அங்கிருந்து கார் மூலம் உதகை வந்த ஆ.ராசா, உதகை ஹில் பங்க்கில் உள்ள தனது வீட்டிற்கு வந்து அலுவலகம் செல்லாமல் நேராக பின்பக்கம் வழியாக சென்று ஒரு தனி அறையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.



நீலகிரி எம்.பி ராசா, சென்னையிலிருந்து உதகை வந்துள்ளதால், அவர் 7 தினங்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...