கோவையில் பன்றி இறைச்சியை கோவில் வாசலில் வீசிச்சென்ற நபரை ஒரே நாளில் கைது செய்த தனிப்படை காவலருக்கு ஆணையாளர் பாராட்டு..!

கோவை: கோவை சலீவன் வீதியில் உள்ள வேணுகோபால சாமி மற்றும் ராகவேந்திரா கோவில்கள் முன்பு, மே 29 ஆம் தேதி பன்றி இறைச்சியை வைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோவை மாநகர காவல்துறையினர் ஹரி பிரகாஷ் (48) என்ற நபரை கைது செய்தனர்.

கோவை: கோவை சலீவன் வீதியில் உள்ள வேணுகோபால சாமி மற்றும் ராகவேந்திரா கோவில்கள் முன்பு, மே 29 ஆம் தேதி பன்றி இறைச்சியை வைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோவை மாநகர காவல்துறையினர் ஹரி பிரகாஷ் (48) என்ற நபரை கைது செய்தனர்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இச்சம்பவத்தில், சம்பந்தபட்ட குற்றவாளியை ஒரே நாளில் துரிதமாக விசாரித்து கைது செய்த சிறப்பு தனிப்படை போலீசாருக்கு, இன்று கோவை மாவட்ட காவல் ஆணையாளர், சுமித் சரண் நேரில் சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்தார்.

சம்பவம் குறித்து, கோவில் அறங்காவலர் கொடுத்த புகாரில் பெயரில், கோவை B1 காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும், சம்பவத்தை நேரில் சென்று ஆய்வு செய்த காவல் ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் (சட்டம் ஒழுங்கு), வழக்கை விசாரிக்க சிறப்பு தனிப்படை ஒன்றை அமைக்க உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ஹரி ராம்பிரகஷ் (48) என்பவரை கைது செய்தனர்.

சம்பவம் நடந்த காலையில் கவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பன்றி இறைச்சி கடையில், கறி வாங்கியுள்ளார் என்பது உறுதிசெய்யப்பட்டது. பின்பு அவரை போலீஸார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்து டிவிட் செய்த கோவை மாநகர ஆணையாளர், சம்பத்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், சமூக வலைதளங்களில் யாரும் மதம் மற்றும் வெறுப்பு சார்ந்த உரையாடல்களை தவிர்த்து, பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...