கோவை: கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி சார்பில் மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக “நீரின்றி அமையாது உலகு” என்ற வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட அஞ்சல் அட்டைகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலா் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப. அவர்களிடம் கோவை அஞ்சல் அலுவலகங்களின் மூத்த கண்காணிப்பாளர் மரு.சுதிர்கோபால் ஜக்கோர் (Dr.Sudhirgopal Jakhere, IPoS) அவர்கள் வழங்கினார்.
கோவை: கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி சார்பில் மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக “நீரின்றி அமையாது உலகு” என்ற வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட அஞ்சல் அட்டைகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலா் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப. அவர்களிடம் கோவை அஞ்சல் அலுவலகங்களின் மூத்த கண்காணிப்பாளர் மரு.சுதிர்கோபால் ஜக்கோர் (Dr.Sudhirgopal Jakhere, IpoS) அவர்கள் வழங்கினார்.
கோவை மாநகராட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள மெக்டூத் அஞ்சல் அட்டைகள் மிக வேகமாக விற்பனையாகும் அஞ்சல் அட்டைகளாகும். 50 பைசாவிற்கு விற்பனையாகும் சாதாரண அஞ்சல் அட்டைகளுடன் ஓப்பிடும்போது மெக்டூத் அஞ்சல் அட்டையின் தற்போதைய விற்பனை விலை அட்டை ஒன்றிற்கு 25 பைசா மட்டுமே. உடல்நலம், சமூகப்பிரச்சினைகள், சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர்
பிரச்சனைகள் தொடா்பான விழிப்புணர்வை பரப்புவதற்கு பொருத்தமான ஊடகமாக மெக்டூத் அஞ்சல் அட்டைகள் திகழ்கின்றன.
பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக கோவை மாநகராட்சி மற்றும் கோவை அஞ்சல் பிரிவின் சார்பில் 1,00,000 அஞ்சல் அட்டைகளில் நீரைப் பாதுகாத்தல் என்ற தலைப்பில் “நீரின்றி அமையாது உலகு” என்னும் கருப்பொருள் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த அஞ்சல் அட்டைகள் கோவை அஞ்சல் பிரிவின் அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.