கோவையில் மழைநீர் சேமிப்பின்‌ முக்கியத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ விதமாக அச்சடிக்கப்பட்டுள்ள அஞ்சல்‌ அட்டை!

கோவை: கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகத்தில்‌ மாநகராட்சி சார்பில்‌ மழைநீர் சேமிப்பின்‌ முக்கியத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ விதமாக “நீரின்றி அமையாது உலகு” என்ற வாசகங்கள்‌ அச்சடிக்கப்பட்ட அஞ்சல்‌ அட்டைகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலா்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப. அவர்களிடம்‌ கோவை அஞ்சல்‌ அலுவலகங்களின்‌ மூத்த கண்காணிப்பாளர்‌ மரு.சுதிர்கோபால்‌ ஜக்கோர்‌ (Dr.Sudhirgopal Jakhere, IPoS) அவர்கள்‌ வழங்கினார்.

கோவை: கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகத்தில்‌ மாநகராட்சி சார்பில்‌ மழைநீர் சேமிப்பின்‌ முக்கியத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ விதமாக “நீரின்றி அமையாது உலகு” என்ற வாசகங்கள்‌ அச்சடிக்கப்பட்ட அஞ்சல்‌ அட்டைகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலா்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப. அவர்களிடம்‌ கோவை அஞ்சல்‌ அலுவலகங்களின்‌ மூத்த கண்காணிப்பாளர்‌ மரு.சுதிர்கோபால்‌ ஜக்கோர்‌ (Dr.Sudhirgopal Jakhere, IpoS) அவர்கள்‌ வழங்கினார்.

கோவை மாநகராட்சியின்‌ சார்பில்‌ வெளியிடப்பட்டுள்ள மெக்டூத்‌ அஞ்சல்‌ அட்டைகள்‌ மிக வேகமாக விற்பனையாகும்‌ அஞ்சல்‌ அட்டைகளாகும்‌. 50 பைசாவிற்கு விற்பனையாகும்‌ சாதாரண அஞ்சல்‌ அட்டைகளுடன்‌ ஓப்பிடும்போது மெக்டூத்‌ அஞ்சல்‌ அட்டையின்‌ தற்போதைய விற்பனை விலை அட்டை ஒன்றிற்கு 25 பைசா மட்டுமே. உடல்நலம்‌, சமூகப்பிரச்சினைகள்‌, சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ நுகர்வோர்

பிரச்சனைகள்‌ தொடா்பான விழிப்புணர்வை பரப்புவதற்கு பொருத்தமான ஊடகமாக மெக்டூத்‌ அஞ்சல்‌ அட்டைகள்‌ திகழ்கின்றன.

பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பின்‌ முக்கியத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ முயற்சியாக கோவை மாநகராட்சி மற்றும்‌ கோவை அஞ்சல்‌ பிரிவின்‌ சார்பில்‌ 1,00,000 அஞ்சல்‌ அட்டைகளில்‌ நீரைப்‌ பாதுகாத்தல்‌ என்ற தலைப்பில்‌ “நீரின்றி அமையாது உலகு” என்னும்‌ கருப்பொருள்‌ அச்சிடப்பட்டுள்ளது.

இந்த அஞ்சல்‌ அட்டைகள்‌ கோவை அஞ்சல்‌ பிரிவின்‌ அனைத்து தபால்‌ நிலையங்களிலும்‌ விற்பனைக்கு கிடைக்கிறது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...