சென்னை: வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை: வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் விதமாக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அதில் 967 போ் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் அந்நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 23,495-ஆக அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டு முறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-
• வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வருவோர் 7 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
• வணிக பயன்பாட்டுக்காக 48 மணி நேரத்துக்குள் வெளிநாடு சென்று திரும்பியோர் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள்.
• மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோருக்கும் பிசிஆர் சோதனை கட்டாயம்.
• வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோர் இ-பாஸ்க்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.