திருப்பூர்: பயணிகளின் வருகையை பொறுத்தே கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் இன்றைய தினம் முதல் தமிழகத்தில் 50 சதவீத பேருந்துகள் இயக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஈரோடு, கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருப்பூரிலிருந்து 197 பேருந்துகள் இன்று காலை முதல் இயக்கப்படுகின்றன.
கோவை மண்டலத்திற்கு உட்பட்ட வெளி மாவட்டங்களுக்கும் திருப்பூரின் ஊரக பகுதிகளுக்கு பேருந்துகள் 50% இயக்கப்பட்டு இருந்தாலும் தற்போது 30 சதவீத மக்களுடன் பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இனிவரும் நாட்களில் மக்களின் வருகையை பொறுத்து கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும், பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இன்றி அனைத்து சேவைகளும் மாவட்ட நிர்வாகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏறத்தாழ 90% வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ரயில் மற்றும் சாலை வழியாக வருபவர்களை தனிமை படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு சானிடைசர் மூலம் கைகள் சுத்தப்படுத்தப்பட்டும், பேருந்துகள் அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது என்று திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய.கார்த்திகேயன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது பேருந்தில் இருந்த பயணிகளிடம் தங்களுக்கு வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா மற்றும் சானிடைசர் வழங்கப்பட்டதா என்று மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.