அரசுப் பேருந்துகளில் Paytm மூலம் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

கோவை: அரசுப் பேருந்துகளில் சோதனை முயற்சியாக Paytm மூலம் கட்டணம் வசூலிப்பது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், பேருந்து பயணிகளிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்க முடிந்தவரை மின்னணு முறையை பயன்படுத்தலாம் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

கோவை: அரசுப் பேருந்துகளில் சோதனை முயற்சியாக Paytm மூலம் கட்டணம் வசூலிப்பது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், பேருந்து பயணிகளிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்க முடிந்தவரை மின்னணு முறையை பயன்படுத்தலாம் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் மார்ச் 24ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பேருந்து சேவைகள் நிறுத்த வைக்கப்பட்டிருந்தது. இன்று முதல் தமிழகத்தில் 50% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் இன்று 6 மண்டலங்களில் இருந்து 5,659 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

6 மண்டலங்களில் 2,866 நகரப் பேருந்துகள், 2,637 புறநகர் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மலை கிராமங்களுக்கு 156 பேருந்துகள் இயக்கப்படுகிறது என தகவல் அளித்துள்ளார். சென்னை மாநகரப் பேருந்துகள் மற்றும் எஸ்ஈடிசி பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசுப் பேருந்துகளில் பயணிகளிடம் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

பயணிகள் குறைவாக இருப்பதால் தனியார் பேருந்துகள் இயக்கம் இல்லை, பயணிகள் வரத்தை பொறுத்து தனியார் பேருந்துகள் இயக்க விரைவில் முடிவு எடுக்கப்படும் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், கன்னியாகுமரியில் காய்கறி சந்தையும், பேருந்து நிலையமும் ஒரே இடத்தில் இருப்பதால் பேருந்து சேவை தொடங்க தாமதம் ஏற்பட்டுள்ளது, கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...