கோவையில் இருந்து குறைந்த அளவிலான பயணிகளுடன் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்!

கோவை காந்திபுரம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் இருந்து குறைந்த அளவிலான பயணிகளுடன் ஈரோடு, திருப்பூர், தாராபுரம், சேலம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது.

கோவை காந்திபுரம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் இருந்து குறைந்த அளவிலான பயணிகளுடன் ஈரோடு, திருப்பூர், தாராபுரம், சேலம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்தில் உள்ள 1019 பேருந்துகளில் இன்று முதல் 506 பேருந்துகள் மட்டும் பொது போக்குவரத்திற்காக இயக்கப்படுகின்றன.

காந்திபுரம் பேருந்து நிலையம், காந்திபுரம் நகர பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்து சேவைகள் நடைபெற்று வருகின்றது. கோவையில் இருந்து தாராபுரம், திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் ஆகிய ஊர்களுக்கு மட்டும் குறைந்த அளவிலான பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

அதே வேளையில் மதுரை, திருச்சி, தூத்துக்குடி, இராமநாதபுரம், நெல்லை பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட வில்லை. இதனால் இந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இருக்கும் என நினைத்து வந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...