கோவை: மயானத்தில் குப்பை கிடங்கு அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் சேனா அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட சங்கனூர் பகுதியில் உள்ள கண்ணப்ப நகரில் பல ஆண்டுகளாக இந்துக்களின் மயானம் இருந்து வருகிறது. தற்போது அந்த மயானத்தில் குப்பை தரம் பிரிக்க இரும்பு பந்தல் அமைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் மாசு ஏற்பட்டு நோய்கள் பரவ வாய்ப்புள்ளதாகவும் மழைக்காலங்களில் துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்பட்டு குழந்தைகள் வயதானவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், அப்பகுதியின் அருகில் தனியார் பள்ளிகள், ஆன்மீக தளங்கள் உள்ளன. எனவே இங்கு குப்பை கிடங்கிற்கு அனுமதி அளித்தால் போத்தனூர் குப்பை கிடங்கு போல அப்பகுதியே துர்நாற்றம் வீச ஆரம்பித்து விடும் என்பதாலும் கொரோனா பாதிப்பு இன்னும் சரிவர குறையாத நிலையில் இது போன்று நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தினர். மேலும், உடனடியாக இதனை நிறுத்திட வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் பாரத் சேனா அமைப்பினர் மனு அளித்தனர்.