திருப்பூர்: திருப்பூரில் இருந்து முதல் 197 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் குறைவான அளவிலேயே பயணம் செய்கின்றனர்.
திருப்பூர்: திருப்பூரில் இருந்து முதல் 197 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் குறைவான அளவிலேயே பயணம் செய்கின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் இன்றைய தினம் முதல் தமிழகத்தில் 50 சதவீத பேருந்துகள் இயக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஈரோடு, கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திருப்பூரிலிருந்து 197 பேருந்துகள் இன்று காலை முதல் இயக்கப்படுகின்றன.

கோவை மண்டலத்திற்கு உட்பட்ட வெளி மாவட்டங்களுக்கும் திருப்பூரின் ஊரக பகுதிகளுக்கு பேருந்துகள் 50% இயக்கப்பட்டு இருந்தாலும் கூட பொது மக்களின் வருகை மிகக்குறைவாகவே காணப்படுகிறது.

மேலும், பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு சானிடைசர் மூலம் கைகள் சுத்தப்படுத்தப்பட்டும், பேருந்துகள் அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.