நீலகிரி கக்கநல்லா சோதனை சாவடியில் முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ. 51 லட்சம் ரொக்கம் பறிமுதல்!

நீலகிரி: நீலகிரி கக்கநல்லா சோதனை சாவடியில் முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ. 51 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நீலகிரி: நீலகிரி கக்கநல்லா சோதனை சாவடியில் முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ. 51 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் உத்தரவுப்படி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகள் வழியே கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று மசினகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கக்கநல்லா சோதனை சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் பெள்ளி, தலைமையில் காவலர்கள் செல்வகுமார், சுப்புராஜ் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.



அப்போது, கர்நாடகாவில் இருந்து வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில் சுமார் 51 லட்சம் ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவரின் உத்தரவின் பேரில் கூடலூர் கோட்டாட்சியரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. பணத்தை கொண்டு வந்த சச்சின் மஹதித்திடம் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...