கோவை மாநகராட்சி குடிநீர் விநியோகம்‌ மற்றும்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணைய‌ர் தலைமையில்‌ கலந்தாய்வுக்‌ கூட்டம்‌!

கோவை: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டல்‌ அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ குடிநீர் விநியோகம்‌ மற்றும்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ ஷ்ரவன்குமார் ஜடாவத்‌ இ.ஆ.ப., தலைமையில்‌ குடிநீர் வடிகால்‌ வாரிய அலுவலா்கள்‌, நெடுஞ்சாலைத்‌ துறை அலுவலர்களுடன்‌ கலந்தாய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

கோவை: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டல‌ அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ குடிநீர் விநியோகம்‌ மற்றும்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ ஷ்ரவன்குமார் ஜடாவத்‌ இ.ஆ.ப., தலைமையில்‌ குடிநீர் வடிகால்‌ வாரிய அலுவலா்கள்‌, நெடுஞ்சாலைத்‌ துறை அலுவலர்களுடன்‌ கலந்தாய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்‌ முன்னிலை வகித்தார்.



இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ அவர்கள்‌ மாநகராட்சியில்‌ குறிச்சி, குனியமுத்தூர்‌ பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ பாதாள சாக்கடை இணைப்பு திட்டப்பணிகளையும்‌, மற்றும்‌ மாநகராட்சியுடன்‌ புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ குடிநீர் குழாய்‌ இணைப்பு பணிகளையும்‌ துரிதமாகவும்‌, தரமானதாகவும் முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதேபோல, புதிதாக கட்டப்பட்டு வரும்‌ 9 எண்ணிக்கையிலான மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி பணிகளையும்‌, பிரதான குழாய்கள்‌ பதிக்கும்‌

பணிகளையும்‌ விரைந்து முடித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும்‌, கோவைப்புதார்‌, சுண்டக்காமுத்தார்‌ பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ பாதாள சாக்கடை குழாய்‌ பதிக்கும்‌ திட்டப்பணிகளையும்‌, சாலைகள்‌ செப்பனிடும்‌ பணிகளையும்‌ பொதுமக்கள்‌, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில்‌ உடனுக்குடன் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலா்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில்‌ மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌ அவர்கள்‌, தெற்கு மண்டல உதவி ஆணையர்‌ டி.ஆர்‌.ரவி அவர்கள்‌, தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய மேற்பாவை பொறியாளர்‌ என்‌.முரளி அவர்கள்‌, செயற்பொறியாளர்‌ ஞானவேல்‌, குடிநீர் வடிகால்‌ வாரிய ஆலோசகர்‌ சம்பத்‌ அவர்கள்‌, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலா்கள்‌, மற்றும்‌ பொறியாளர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...