கோவை: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டல் அலுவலகக் கூட்டரங்கில் குடிநீர் விநியோகம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., தலைமையில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலா்கள், நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கோவை: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டல அலுவலகக் கூட்டரங்கில் குடிநீர் விநியோகம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., தலைமையில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலா்கள், நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் அவர்கள் மாநகராட்சியில் குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை இணைப்பு திட்டப்பணிகளையும், மற்றும் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் இணைப்பு பணிகளையும் துரிதமாகவும், தரமானதாகவும் முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதேபோல, புதிதாக கட்டப்பட்டு வரும் 9 எண்ணிக்கையிலான மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி பணிகளையும், பிரதான குழாய்கள் பதிக்கும்
பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், கோவைப்புதார், சுண்டக்காமுத்தார் பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் திட்டப்பணிகளையும், சாலைகள் செப்பனிடும் பணிகளையும் பொதுமக்கள், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் உடனுக்குடன் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலா் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன் அவர்கள், தெற்கு மண்டல உதவி ஆணையர் டி.ஆர்.ரவி அவர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பாவை பொறியாளர் என்.முரளி அவர்கள், செயற்பொறியாளர் ஞானவேல், குடிநீர் வடிகால் வாரிய ஆலோசகர் சம்பத் அவர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலா்கள், மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.