கோவை சூலூர் அருகே மர இயந்திரத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!

கோவை: கோவையில் மர இயந்திரத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை: கோவையில் மர இயந்திரத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவையை அடுத்த சூலூர் கலங்கல் சாலையில் உள்ள பொன்னப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவர் ஆதர்ஷ்னா பேக்கேஜ் மில் என்ற மர அறுவை நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் பேக்கிங் மற்றும் பல்வேறு தேவைகளுக்கான மர பெட்டிகள் தயார் செய்து வருகிறார். இவரது மனைவி கல்பனா(23). இந்தம்பதியினருக்கு பெண் குழந்தை உள்ளது. தற்போது கல்பனா கர்ப்பமாக உள்ள நிலையில் நேற்று கணவருக்கு உதவியாக மர அறுவை மில்லில் உதவியுள்ளார்.



இந்த நிலையில், தர்மராஜ் மற்றும் கல்பனா மரம் இழைக்கும் இயந்திரத்தில் வேலை செய்து கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக கல்பனா அணிந்திருந்த உடை இயந்திரத்தில் சிக்கியது. இதில் நிலை தடுமாறி விழுந்த கல்பனா இயந்திரத்தில் சிக்கியதில் தலை துண்டாகி உயிரிழந்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்ப்பிணி பெண் தலை துண்டித்து உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...