கோவையில் ரிசர்வ் வங்கி விதிகளுக்கு முரணாக வாடிக்கையாளர்களிடம் கடன் தொகை வசூலிப்பதாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

கோவை: ரிசர்வ் வங்கி விதிகளுக்கு முரணாக வாடிக்கையாளர்களிடம் கடன் தொகை வசூலிப்பதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் பஜாஜ் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: ரிசர்வ் வங்கி விதிகளுக்கு முரணாக வாடிக்கையாளர்களிடம் கடன் தொகை வசூலிப்பதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் பஜாஜ் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பந்தைய சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி வணிகவளாகத்தில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஏராளமான பொதுமக்கள் கடன் பெற்றுள்ளனர்.

இதனிடையே கொரோனா ஊரடங்கு காரணமாக தவணை தொகை செலுத்த ரிசர்வ் வங்கி கால அவகாசம் வழங்கியும் பஜாஜ் நிறுவனம் அதனை கருத்தில் கொள்ளாமல் செயல்படுவதாக கூறப்படுகிறது. கடன் பெற்றவர்கள் தவணை தொகையை செலுத்த வேண்டும் என நிர்பந்தம் செய்வதுடன் தவணை தொகை செலுத்தாதவர்களுக்கு அபராதமும் விதித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் இன்று அந்நிறுவனத்தை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



குறைந்த அளவு தவணை தொகைக்கு காசோலையில் பணம் இல்லாததால் வங்கியில் தனியாக அபராதமும், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் தனி அபராதமும் விதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள் கடும் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர்.

மேலும், அந்நிறுவனத்தில் ஏற்கனவே கடன் பெற்று முழு தொகையையும் அடைத்த பழைய வாடிக்கையாளர்களுக்கும் கூட அபராத தொகை விதித்திருந்ததால் அவர்களும் பழைய ஆவணங்களுடன் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவவே அங்கு சென்ற காவல்துறையினர் கூட்டம் சேர்க்காமல் பிரச்சினையை முடித்து வைக்குமாறு நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தினர்.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம் நடத்தியதால் பந்தைய சாலை பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நிலவியது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...