திருப்பூர்: ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 7,500 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி ஆட்டோ தொழிற்சங்கம் சார்பாக திருப்பூரில் 32 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் ஆட்டோ ஓட்டும் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதம் ரூபாய் 7,500 வழங்க வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்யாத ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டும், ஊரடங்கு காலத்தில் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து ஆட்டோக்களையும் விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் ஏஐடியுசி ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட 32 இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.