நீலகிரி: உதகை அடுத்துள்ள காந்தள் பகுதியில் புதிய ரக வெட்டுக்கிளியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி: உதகை அடுத்துள்ள காந்தள் பகுதியில் புதிய ரக வெட்டுக்கிளியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த புதிய வகை வெட்டுக்கிளி, வட மாநிலங்களில் விவசாய பயிர்களை அழித்து வரும் வெட்டுக்கிளியா? என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று அச்சம் நீங்குவதற்க்குள் வட மாநிலங்களில் வெட்டுக்கிளியின் ஊடுருவல் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு 35 ஆயிரம் பேர் உண்ணக்கூடிய பயிர்களை இவை அழித்து வருகின்றது.
இதனிடையே, உதகை அடுத்துள்ள காந்தள் பகுதியில் வியாபாரிகள் வழக்கம் போல் கடைகளை அடைத்து செல்லும் போது கடை வாசலில் ஒரு வெட்டுக்கிளி தென்பட்டுள்ளது. இது வரை கண்டிராத வெட்டுக்கிளி என கருத்தபட்டு உடனடியாக அதனை ஒரு சிறிய பாட்டிலில் அடைத்து மாவட்ட ஆட்சியருக்கு நேரடியாக தொடர்பு கொண்டு வட மாநிலங்களை அச்சுருத்தி வரும் வெட்டுகிளியா என சந்தேகத்தின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சம்பந்தபட்ட அதிகாரிகளை ஆய்வுக்கு செய்ய அறிவுறித்தியுள்ளார். இது வட மாநிலத்தில் இருந்து பொருட்களை எடுத்து வந்த லாரிகளில் வந்ததா? எனவும் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
இது சாதாரண ரகமான வெட்டுக்கிளியாக கூட இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் கோவை வேளாண்மை ஆராய்ச்சி மையத்திற்கு இந்த வெட்டுக்கிளி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் ஆலோசனைக்குப் பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.