திருப்பூர்: திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை கேட்கப்பட்ட பலத்த சத்தம் சூலூர் விமானப்படையில் புதிதாக சேர்க்கப்பட்ட அதிநவீன தேஜஸ் சூப்பர்சானிக் விமானத்தின் சத்தம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் விளக்கமளித்துள்ளார்.
திருப்பூர்: திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை கேட்கப்பட்ட பலத்த சத்தம் சூலூர் விமானப்படையில் புதிதாக சேர்க்கப்பட்ட அதிநவீன தேஜஸ் சூப்பர்சானிக் விமானத்தின் சத்தம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர்
விஜயகார்த்திகேயன் விளக்கமளித்துள்ளார்.
திருப்பூரில் இன்று காலை 10:40 மணியளவில் வெடி வெடித்தது போன்ற பல சத்தம் பல இடங்களில் கேட்டது. இது மக்களை அச்சமடைய வைத்தது.
திருப்பூர் மாவட்டத்தில், காங்கேயம், தாராபுரம், குண்டடம், மூலனூர் மற்றும் காங்கயம் பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியே வந்து பார்த்தனர். நிலநடுக்கம் ஏதும் ஏற்பட்டிருக்கலாமோ எனவும் அச்சம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை கேட்கப்பட்ட பலத்த சத்தம் சூலூர் விமானப்படையில் புதிதாக சேர்க்கப்பட்ட அதிநவீன தேஜஸ் சூப்பர்சானிக் விமானத்தின் சத்தம் எனவும் இதனால், யாரும் பீதி அடைய வேண்டாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.