கோவை: கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பரவலான மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வெயில் வாட்டி வந்ததால் பொதுமக்கள் வெளியே வரவே அச்சப்பட்டனர். அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடையும் நிலையில், மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக கவுண்டம்பாளையம், துடியலூர், சாய்பாபாகாலனி, சிங்காநல்லூர், நரசிம்மநாய்க்கன்பாளையம் மற்றும் பிற பகுதிகள் மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்ப சலனம் காரணமாக அவதிப்பட்டு வந்த மக்கள் தற்போது குளிர்ந்த காற்றுடன் மழை பெய்து வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே, மழை காரணமாக கருமத்தம்பட்டி ராயர்பாளையம் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகில் இருந்த ஆலமரம் சாய்ந்தது.

மேலும் மரம் மின்கம்பம் மீது விழுந்ததில் மின்கம்பம் சாய்ந்ததால் அப்பகுதியில் மின்சார தடை ஏற்பட்டு உள்ளது.