கோவை அரசு கல்லூரியில் காலை மற்றும் மதிய நேர முறையை மாற்றக் கூடாது என இந்திய மாணவர் சங்கத்தினர் கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் மனு!

கோவை: கோவை அரசு கல்லூரியில் காலை மற்றும் மதிய நேர முறையை மாற்றக் கூடாது என இந்திய மாணவர் சங்கத்தினர் கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: கோவை அரசு கல்லூரியில் காலை மற்றும் மதிய நேர முறையை மாற்றக் கூடாது என இந்திய மாணவர் சங்கத்தினர் கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தற்பொழுது அரசு கல்லூரிகளில் காலை மற்றும் மதியம் என்று இரு சுழற்சி முறையில் கல்வி நேரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் அரசு கல்லூரிகளில் இருக்கும் இரு சுழற்சி மறையானது ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறையக் கூடும். இடைநிற்றல் அதிகமாக கூடும். எனவே, இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் அதுமட்டுமின்றி அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலோனோர் பார்ட் டைம் வேலை செய்து படித்து வருபவர்கள்.

ஆகவே, தற்போது உள்ள இந்த இரு சுழற்சி முறையானது ஒரு முறைக்கு மாற்றப்பட்டால் பல்வேறு மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடும். அதுமட்டுமின்றி இது அமலுக்கு வந்தால் கல்லூரிகளில் படிக்கக் கூடிய ஒன்று மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் நிலை பாதிக்கப்படும். எனவே இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தினர் கோவையில் உள்ள கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...