திருப்பூரில் பணியின் போது உயிரிழந்த மின்வாரிய ஒப்பந்த தொழிலாளரின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் ஒன்று கூடியதால் பரபரப்பு!

திருப்பூர்: திருப்பூரில் பணியின் போது உயிரிழந்த மின்வாரிய ஒப்பந்த தொழிலாளரின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் ஒன்று கூடியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூரில் பணியின் போது உயிரிழந்த மின்வாரிய ஒப்பந்த தொழிலாளரின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் ஒன்று கூடியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



திருப்பூர் மாநகரம் பி.என் ரோடு அண்ணா நகரைச் சேர்ந்த விவிதன் (31) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூர் மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை விவிதன் துணை மின் நிலையத்தில் மின்சார கம்பத்தில் பணி செய்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.



இந்த நிலையில், விவிதன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும், உடனடியாக நிவாரண தொகை வழங்க வேண்டும், இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உடலை வாங்க மறுத்து திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் கூடியுள்ளனர்.

இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, அரசு சார்பில் நிச்சயம் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் கூறினர். மேலும், உடலை வாங்க மறுத்துள்ளவர்களிடம், அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...