குன்னூர் அருகே கஞ்சா போதையில் தந்தையை வெட்டிய மகன் கைது!

நீலகிரி: குன்னூர் அருகே கஞ்சா போதையில் தந்தையை வெட்டிய மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


நீலகிரி: குன்னூர் அருகே கஞ்சா போதையில் தந்தையை வெட்டிய மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் போகி தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் (51) என்பவரது மகன் ராஜாராம் (21). இருவரும் கூலி வேலை செய்து வரும் நிலையில், நேற்று தனது வீட்டில் ராஜாராம் கஞ்சா போதையில் தகாத வார்த்தைகளை பேசிக் கொண்டு இருந்தார். இதனை அவரது தகப்பனார் ரவிச்சந்திரன் தட்டி கேட்டார். இதனால் ராஜாராம் தனது தகப்பனார் ரவிச்சந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், வாக்குவாதம் முற்றவே ராஜாராம் வீட்டிலிருந்த வெட்டுக் கத்தியை எடுத்து அவரது இடது காலில் வெட்டினார். இதனால் படுகாயமடைந்த ரவிச்சந்திரன் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்து தகவலறிந்த வெலிங்டன் காவல் ஆய்வாளர் ஆனந்தன், உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் விரைந்து சென்று தந்தையை வெட்டுக் கத்தியால் வெட்டிய ராஜாராமை கைது செய்து குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குன்னூர் மாஜிஸ்த்ரேட் ராஜாராமை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ராஜாராம் ஊட்டி சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...