வால்பாறையில் 2,000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு!

கோவை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வால்பாறையில் சுமார் 2,000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு வழங்கினார்.

கோவை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வால்பாறையில் சுமார் 2,000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் 144 ஊரடங்கு தடை உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 15 ஆயிரம் குடும்பங்களுக்கு முதல் கட்டமாக விலையில்லா காய்கறிகளை கடந்த மாதம் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தனது சொந்த செலவில் வழங்கினார்.



இதன் இரண்டாம் கட்டமாக 3000ம் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் நிவாரண பொருட்களை வால்பாறை நகர் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது. இதே போல், மூன்றாம் கட்டமாக அனைத்து தேயிலை தோட்டப் பகுதிகளிலும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று நான்காம் கட்டமாக கோவில் பூசாரிகள், ஆட்டோ, டாக்சி, வேன், டெம்போ ஓட்டுனர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் கிறிஸ்துவ தேவாலயத்தினருக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.



இதனை தொடர்ந்து, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசலில் முஸ்லீம் மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்ததோடு 360 குடும்பங்களுக்கு கொரானா நிவாரண பொருகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, நகராட்சி பொறியாளர் சரவணபாபு, வட்டாட்சியர் ராஜா, காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை அமீது, வாசு, நகர செயலாளர் மயில்கனேசன், பொன் கணேசன், சலாவுதீன் நரசப்பன், எம் ஆர்.எஸ் மோகன் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...