திருப்பூர்: சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூபாய் 7.25 கோடி மதிப்பீட்டில் பொலிவுறு சாலைக்கான பூமி பூஜையை திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.
திருப்பூர்: சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூபாய் 7.25 கோடி மதிப்பீட்டில் பொலிவுறு சாலைக்கான பூமி பூஜையை திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாநகரில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கண்ணகி நகர் 60 அடி சாலையை மிடுக்கான நகரம்(2019-2020) திட்டத்தின்கீழ் ரூபாய் 7.25 கோடி மதிப்பீட்டில் பொலிவுறு சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.விஜயகுமார் மற்றும் முன்னாள் அமைச்சரும் திருப்பூர் மாநகர மாவட்ட கழக செயலாளருமான திரு.எம்.எஸ்.எம்.ஆனந்தன் அவர்கள் பூமி பூஜையை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாநகராட்சி இரண்டாம் மண்டல துணை ஆணையர் செல்வநாயகம் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.