கோவை மாவட்ட நிர்வாகத்தின் குளறுபடியால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவதி - இந்திய தொழிற்சங்க மையம் கண்டனம்

கோவை: மாவட்ட நிர்வாகத்தின் குளறுபடியால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தவித்து வருவதாக கோவை மாவட்ட இந்திய தொழிற்சங்க மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.


கோவை: மாவட்ட நிர்வாகத்தின் குளறுபடியால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தவித்து வருவதாக கோவை மாவட்ட இந்திய தொழிற்சங்க மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிஐடியு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கொரோனா ஊரடங்கு காரணமாக கோவையில்‌ பணிபுரியும்‌ புலம்‌ பெயர்ந்த தொழிலாளர்கள்‌ பணிபுரிந்த தொழில்‌ கூடங்களில்‌ சம்பளம்‌ மறுக்கப்பட்டு, தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களில்‌ காலி செய்து சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல்‌ பெரும்‌ அவதிப்பட்டு வருவதை காணமுடிகிறது.

கோவை மாவட்ட அரசு நிர்வாகம்‌ புலம்‌ பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதில்‌ எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்‌ போதுமானதல்ல எனவும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதில் உள்ள குளறுபடிகளை மாவட்ட நிர்வாகங்கள் சீர் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ள சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகங்கள் முறையாக கணக்கெடுப்பு நடத்தவில்லை எனவும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவிக்கும் மாவட்ட நிர்வாகங்கள் அவற்றில் உள்ள குளறுபடிகளை சீர் செய்ய வேண்டும்.

மேலும், ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...