கோவை: மாவட்ட நிர்வாகத்தின் குளறுபடியால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தவித்து வருவதாக கோவை மாவட்ட இந்திய தொழிற்சங்க மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவை: மாவட்ட நிர்வாகத்தின் குளறுபடியால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தவித்து வருவதாக கோவை மாவட்ட இந்திய தொழிற்சங்க மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிஐடியு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கொரோனா ஊரடங்கு காரணமாக கோவையில் பணிபுரியும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்த தொழில் கூடங்களில் சம்பளம் மறுக்கப்பட்டு, தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களில் காலி செய்து சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பெரும் அவதிப்பட்டு வருவதை காணமுடிகிறது.
கோவை மாவட்ட அரசு நிர்வாகம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதல்ல எனவும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதில் உள்ள குளறுபடிகளை மாவட்ட நிர்வாகங்கள் சீர் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ள சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகங்கள் முறையாக கணக்கெடுப்பு நடத்தவில்லை எனவும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவிக்கும் மாவட்ட நிர்வாகங்கள் அவற்றில் உள்ள குளறுபடிகளை சீர் செய்ய வேண்டும்.
மேலும், ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.