கோவையில் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதை தட்டி கேட்டவரை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர்கள் மூவர் கைது

கோவை: கோவையில் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதை தட்டி கேட்டவரை கத்தியை காட்டி மிரட்டிய மூவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதை தட்டி கேட்டவரை கத்தியை காட்டி மிரட்டிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் சூர்யபிரகாஷ்(23). இதே பகுதி ராமமூர்த்தி சாலை பகுதியை சேர்ந்த முரளி என்பவரின் மகன் ராகுல்ராஜ்(19), முத்துசாமி காலனி பகுதியை சேர்ந்த முருகனின் மகன் சபரீஷ்(21) ஆகிய மூவரும் நண்பர்கள்.

இவர்கள் மூவரும் அடிக்கடி மது அருந்திவிட்டு தங்களது இரு சக்கர வாகனங்களில் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக ஓட்டி வந்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதியில் வசித்து வரும் நாச்சிமுத்து(33) தனது நண்பர் சரத்துடன் சென்று சூர்யபிரகாஷை எச்சரித்து உள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர் இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்து சென்று விட்டார்.

பின்னர் இது குறித்து தனது நண்பர்களிடம் தெரிவிக்க மூவரும் நாச்சிமுத்துவிடம் வாக்குவாதம் செய்த நிலையில் சூர்யபிரகாஷின் நண்பரான சபரீஷ் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். இது குறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணைக்கு பின்னர் மூவரையும் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...