கோவை: கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் சமூக சேவை பிரிவின் சார்பில் 'கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்' அடங்கிய தொகுப்புகளை இன்று உக்கடம், கடைவீதி, குனியமுத்தூர், போத்தனூர் மற்றும் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை RMO அவர்களையும் இன்று சந்தித்து இந்த கொடிய நோயை எதிர்த்துப் போராடி வரும் அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததோடு பாதுகாப்பு உபகரணங்கள் (முகக்கவசம், கையுறை மற்றும் சானிடைசர்) வழங்கப்பட்டது.
இந்த சந்திப்பில் கோவை மாநகர தலைவர் PS உமர் பாரூக், கோவை மக்கள் தொடர்பு செயலாளர் ஜனாப் அப்துல் ஹக்கீம், நிறுவனங்களின் செயலாளர் ஜனாப் உமர் ஜாபர், MA. ஹனீஃபா மற்றும் அனீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.