கோவையில் தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் 13 சவரன் தாலி கொடியை திருடி சென்ற மர்ம நபர்கள்! போலீசார் விசாரணை

கோவை: கோவையில் தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் 13 சவரன் தாலி கொடியை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் 13 சவரன் தாலி கொடியை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கணபதி வரதராஜ நகர் பகுதியை சேர்ந்தவர் எட்வின் டேவிட் என்பவரது மனைவி மங்கயர்கரசி(53). நேற்று இவர் கடை முன் நின்று கொண்டு இருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரு நபர்களில் ஒருவர் மங்கயர்கரசி கழுத்தில் இருந்த 13 சவரன் தாலி கொடியை பறித்து விட்டு தப்பியோடினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உதவிக்காக சத்தம் போட்டுள்ளார். ஆனால் அருகில் இருப்பவர்கள் வரும் முன் திருடர்கள் மின்னல் வேகத்தில் இரு சக்கர வாகனத்தில் தப்பியோடினர்.

பின்னர் இது குறித்து மங்கயர்கரசி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள சரவணம்பட்டி போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...