வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருவதால், இரு மாதங்களுக்கு வாடகையில் விலக்கு அளிக்க நடன கலைஞர்கள் ஆட்சியரிடம் மனு

வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருவதால், இரு மாதங்களுக்கு வாடகையில் விலக்கு அளிக்க நடன கலைஞர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருவதால், இரு மாதங்களுக்கு வாடகையில் விலக்கு அளிக்க நடன கலைஞர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். 



கொரோனா மாதிரி வடிவமைப்பு உடையுடன் வந்திருந்த கோவை மாவட்ட நடன கலைஞர்கள், கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக வருமானம் இன்றி முடங்கி உள்ளதாகவும், இதனை நம்பி உள்ள நடன கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கபட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், நடன தொழில் நலிவடைந்து விடாமல் பாதுகாக்கும் நோக்கில் சேவ் & சப்போர்ட் டான்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற அமைப்பை துவங்கி உள்ளதாகவும், இதன் மூலமாக கடந்த இரு மாதங்களாக கிடைக்க பெற்ற உதவிகள் மூலம் இத்தொழிலை நம்பி வாழ்பவர்களுக்கு உதவியதாக கூறினர்.

கோவை மாநகரில் 45 நடன ஸ்டுடியோஸ் உள்ளதாகவும் அனைவரும் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருவதால், இரு மாதங்களுக்கு வாடகையில் விலக்கு அளிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதே போல், இந்த தொழிலை நம்பி மேக்கப் செய்யும் தொழிலை நம்பி 25 குடும்பங்கள் உள்ளதாகவும் கூடிய விரைவில் நடன நிகழ்ச்சிகள் நடத்த தங்களுக்கு அனுமதி தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...