கோவை: கோவை அருகே வாகனத்தில் மோதி அடிபட்ட புள்ளிமானிற்கு வாகன ஒட்டிகள் தண்ணீர் கொடுத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்து உயிர் காக்க உதவினர்.
கோவை: கோவை அருகே வாகனத்தில் மோதி அடிபட்ட புள்ளி மானிற்கு அவ்வழியாக சென்ற பத்திரிக்கையாளர் ஒருவர் தண்ணீர் கொடுத்து உதவி செய்து, அம்மான் உயிர் காக்க உதவியுள்ளார்.
கோவை மாவட்டம் ஆனைக்கட்டி சுற்றுவட்டார பகுதிகள் யானை, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. ஆனைகட்டி மலைப்பாதையில் வன விலங்குகள் அடிக்கடி தென்படுவது உண்டு.
இந்நியில், இன்று மாலை வனப்பகுதியில் இருந்து 2 மாதமே ஆன புள்ளி மான் ஒன்று வெளியே வந்தது. அப்போது, ஆனைக்கட்டி சாலையில் சென்ற ஒரு வாகனம் மோதி புள்ளி மான் விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்து உயிருக்கு போராடிய புள்ளி மானை, அவ்வழியாக சென்ற கோவையை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர், சுதாகர் மீட்டு தண்ணீர் கொடுத்து உதவியுள்ளார்.
மேலும், வனத்துறை சோதனைச்சாவடியில் புள்ளி மானை ஒப்படைத்து உயிர் காக்க உதவி செய்துள்ளார். இதையடுத்து, வனவர்கள் செய்த முதலுதவி சிகிச்சைக்கு பின் அடிபட்ட மான் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.