கோவையில் குடிபோதையில் கணவனை கல்லால் அடித்து கொலை செய்து நாடகமாடிய பெண் கைது!

கோவை: கோவையில் குடிபோதையில் கணவனை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு, கால் தவறி விழுந்து கணவர் மரணமடைந்ததாக நாடகமாடிய பெண்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் குடிபோதையில் கணவனை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு, கால் தவறி விழுந்து கணவர் மரணமடைந்ததாக நாடகமாடிய பெண்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம் நடுவநேரி பகுதியை சேர்ந்த தம்பதியினர் அண்ணாமலை மற்றும் பிரியா. இவர்கள் கோவை மாவட்டம் செட்டிபாளையம் அருகே உள்ள பெரியகுயிலி கிராமத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வருகின்றனர். இருவருக்கும் குடி பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில், கணவன் மனைவி இருவரும் கடந்த 17ம் தேதி வீட்டில் இரவு மது அருந்தியுள்ளனர். போதை அதிகமான நிலையில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மனைவி பிரியா கணவர் அண்ணாமலை தலையில் கல்லை தூக்கி போட்டதில் படுகாயம் அடைந்த அவர் வீட்டிலேயே உயிரிழந்தார்.

உடனடியாக பிரியா இது குறித்து தனது அக்காள் கணவர் செல்வராஜை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறியுள்ளார். இதனை தொடர்ந்து செல்வராஜ் சேலத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோவை வந்து அண்ணாமலையின் உடலை எடுத்துக்கொண்டு சேலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குடிபோதையில் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து விட்டதாக நாடகமாடியுள்ளார்.

மருத்துவ பரிசோதனையில் இது விபத்தல்ல எனவும் கொலை என்பதும் தெரியவந்தது. இது குறித்து கோவை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை சேலம் சென்ற கோவை மாவட்டம் செட்டிபாளையம் போலீசார் பிரியாவையும் அவரது அக்காள் கணவர் செல்வராஜையும் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து, கைது செய்த இருவரையும் கோவை அழைத்து வந்து விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இறந்த அண்ணாமலையின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...