வால்பாறை வனச்சரகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்!

கோவை: வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கப்பட்டது.


கோவை: வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சிறுத்தை, புலி, யானை, சிங்கவால் குரங்கு, மான், வரையாடு, கரடிகள், காட்டுப்பன்றி, காட்டெருமை உட்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

ஆனைமலை புலிகள் காப்பக உதவி கள இயக்குநர் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின் பேரில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனச்சரகங்களில் கோடை கால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பயிற்சி வால்பாறை அட்டகட்டியிலுள்ள வன மேலாண்மை பயிற்சி மையத்தில் நேற்று நடைபெற்றது.

இதனை தொடர்ந்து வால்பாறை வனச்சரகத்திற்குட்பட்ட காடம்பாறை பிரிவு பகுதியில் கணக்கெடுப்பு பணிகள் துவங்கியது. வால்பாறை வனச்சரகர் செந்தில்குமார் மற்றும் வனவர் முனியாண்டி கணக்கெடுக்கும் பணியினை துவக்கி வைத்தனர்.



வன விலங்குகளின் கால் தடங்கள், மரங்களில் உள்ள கீறல்கள், விலங்குகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு குறிக்கப்பட்டது. இந்த பணியில் ஒரு வனவர் 5 ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர். ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி, டாப்சிலிப், பொள்ளாச்சி வனச்சரகங்களில் கணக்கெடுப்பு இன்று துவங்கி 25ம் தேதி வரை நடைபெறுகிறது.



வனத்துறையினர் 64 குழுக்களாகப் பிரிந்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...