கோவை: வால்பாறையில் நலிவுற்ற 750 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு வழங்கினார்.
கோவை: வால்பாறையில் நலிவுற்ற 750 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு வழங்கினார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 18 ஆயிரம் குடும்பங்களுக்கு முதல் கட்டமாக விலையில்லா காய்கறிகளை கடந்த வாரம் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தனது சொந்த செலவில் வழங்கினார்.
இதன் இரண்டாம் கட்டமாக அரிசி பருப்பு மற்றும் நிவாரண பொருட்களை வால்பாறை நகர் பகுதி மக்களுக்கு அரசு அறிவித்த சமூக இடைவெளி விட்டு முகக் கவசங்களும் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, மூன்றாம் கட்டமாக வால்பாறை சி.எஸ்.ஜ வளாகத்தில் நலிவுற்ற 750 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதே போல் கருமலை தேயிலை தோட்டம் மற்றும் சிறுகுன்றா தோட்டத்தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணை, சர்க்கரை மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, வட்டாட்சியர் ராஜா, கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை அமீது, வாசு, நகர செயலாளர் மயில்கனேசன். பொன் கணேஷ், சலாவுதீன் நரசப்பன் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.