கோவை மாவட்ட ஆட்சியர் அதிரடி..!  பழங்குடி மாணவிக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது

சாதிச் சான்றிதழ் இல்லாததால் மருத்துவக் கல்வி கற்க முடியாமல் தவித்த கோவையை சேர்ந்த பழங்குடி மாணவிக்கு, கோவை மாவட்ட ஆட்சியர் கு இராசமணி அவர்கள் மாணவிக்கு சாதி சான்றிதழ் வழங்கினார்.

கோவை: சாதிச் சான்றிதழ் இல்லாததால் மருத்துவக் கல்வி கற்க முடியாமல் தவித்த கோவையை சேர்ந்த பழங்குடி மாணவிக்கு, கோவை மாவட்ட ஆட்சியர் கு இராசமணி அவர்கள் மாணவிக்கு சாதி சான்றிதழ் வழங்கினார்.

கோவை திருமலையாம்பாளையம் அருகே உள்ள ரொட்டி கவுண்டன் புதூர் பகுதியில் வசித்து வரும் பழங்குடியின குடும்பத்தினருக்கு சாதி சான்றிதழ்கள் கிடைக்காமல் சிரமப்பட்டு வந்த நிலையில், ஊடகங்கள் வாயிலாக வெளிவந்த தகவலையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சான்றிதழ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பழங்குடியின மக்களுக்குசில இடங்களில் முறையான சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படாததால் அவர்களின் அடுத்தகட்ட வாழ்க்கை முறைகளான கல்வி, வேலை வாய்ப்புகள், ஆகியவை பாதிக்கப்படுகிறது.

இப்படி கோவை மாவட்டத்தில் திருமலையாம்பாளையம் ரொட்டி கவுண்டன்புதூர் பகுதியில் மலசர் என்ற பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்றும், பல ஆண்டுகளாக சாதி சான்றிதழ்கள் கிடைப்பதில்லை என்றும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மூலம் ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த சங்கவி என்ற பனிரெண்டாம் வகுப்பு படித்த மாணவி சாதி சான்றிதழ் இல்லாததால் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை குறித்தும் 

கோவை பத்திரிகையாளர்கள் மூலம் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகியது.

அதேபோல, பத்திரிக்கையாளர்கள் செய்தியுடன் நிறுத்திவிடாமல், அதை நேரடியாக கோவை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனைத்தொடர்ந்து மாணவி சங்கவிக்கு மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி உத்தரவின் பேரில், மதுக்கரை வருவாய் வட்டாட்சியர் சரண்யா, சாதி சான்றிதழை வழங்கினார். 

அதேபோல அப்பகுதியில் பல மாதங்களாக திறக்கப்படாத கழிப்பறையை திருமலையாம்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் தற்போது திறந்துள்ளது. 

மேலும், மலசர் பழங்குடிகளுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சான்றிதழைப் பெற்ற மாணவி கூறும்போது : 

என் மேல் படிப்புக்கு உதவக்கூடிய சாதி சான்றிதழ் தற்போது எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல இதற்கு உதவிய தமிழக அரசு, அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...