நீலகிரி: உதகை தாவரவியல் பூங்காவில் பணிபுரியும் ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் சுமார் 6 முதல் 7 வயது மதிக்கத்தக்க சிறுத்தை ஒன்று அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், தகவல் தெரிவித்தும் 3 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவர்கள் வராததால் வன ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர்.

உதகை தாவரவியல் பூங்காவை சுற்றிலும் வனப்பகுதி நிறைந்து காணப்படுகிறது. இங்கு காட்டெருமை, கரடி, சிறுத்தை, உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், தாவரவியல் பூங்காவில் பணிபுரியும் ஊழியர்கள் குடியிருப்புக்கு செல்லும் சாலையில் சிறுத்தை ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிப்பதை கண்ட இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஆறு முதல் ஏழு வயது மதிக்கத்தக்க இந்த சிறுத்தை, காட்டெருமை அல்லது பிற விலங்குகளுடன் ஏற்பட்ட மோதலில் பலத்த காயம் ஏற்பட்டு நிலை தடுமாறி கிடப்பதாக தெரிவித்தனர்.
மேலும், மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்து மூன்று மணி நேரத்திற்கு மேலாகியும் யாரும் வராததால் பொது மக்கள் அதிருப்தி அடைந்தனர். பின்னர் வன ஊழியர்கள் வலையின் உதவியுடன் சிறுத்தையை வாகனத்தில் ஏற்றி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.