பல்லடத்தில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு - டோக்கன் முறையில் துவங்கியது மதுபான விற்பனை!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், டோக்கன் முறையில் மதுபானங்கள் விற்பனை துவங்கியது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், டோக்கன் முறையில் மதுபானங்கள் விற்பனை துவங்கியது.

திருப்பூர் மாவட்டத்தில் 241 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இன்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

இந்த நிலையில், பல்லடம் தாலுக்காவிற்குட்பட்ட பகுதிகளில் 21 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் பல்லடம் நகரப்பகுதியில் 2 கடைகளை தவிர்த்து 19 கடைகள் திறக்கப்பட்டன. முன்னதாக நீல நிறத்தில் டோக்கன் வழங்கப்பட்டன.

கடை ஒன்றிற்கு ஒரு மணி நேரத்திற்கு 70 டோக்கன் வீதம் மாலை 5 மணி வரை 500 டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன.



மேலும் டோக்கன் பெற்றவர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளி விட்டு முககவசம் அணிந்து மது வாங்கி சென்றனர்.



மேலும் கூட்டம் அதிகம் காணப்படும் கடைகளில் 500 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும் நிலையில் மீதியுள்ளவர்களுக்கு வழங்கப்படும் டோக்கன்களை மறுதினம் பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...