கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ கொரோனா வைரஸ்‌ தடுப்புப்‌ பணிகள்‌ குறித்து கள ஆய்வுக்குழு அலுவலர்கள்‌ ஆய்வுக்கூட்டம்

கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ கொரோனா வைரஸ்‌ தடுப்புப்‌ பணிகள்‌ தொடர்பாக கள ஆய்வுக்குழு அலுவலா்கள்‌ இயக்குநா்‌ புவியியல்‌ மற்றும்‌ சுரங்கத்துறை எ.சரவணவேல்ராஜ்‌ இ.ஆ.ப., அவர்கள்‌, சிட்கோ மேலாண்மை இயக்குநரா ஆர்‌.கஜலெட்சுமி இ.ஆ.ப., ஆகியோர்‌ தலைமையில்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ முன்னிலையில்‌ அலுவலர்களுடன்‌ ஆய்வுக்கூட்டம்‌ நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ கொரோனா வைரஸ்‌ தடுப்புப்‌ பணிகள்‌ தொடர்பாக கள ஆய்வுக்குழு அலுவலா்கள்‌ இயக்குநா்‌ புவியியல்‌ மற்றும்‌ சுரங்கத்துறை எ.சரவணவேல்ராஜ்‌ இ.ஆ.ப., அவர்கள்‌, சிட்கோ மேலாண்மை இயக்குநரா ஆர்‌.கஜலெட்சுமி இ.ஆ.ப., ஆகியோர்‌ தலைமையில்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ முன்னிலையில்‌ அலுவலர்களுடன்‌ ஆய்வுக்கூட்டம்‌ நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில்‌, கள ஆய்வுக்குழு அலுவலர்கள்‌ தெரிவித்ததாவது:-

கோவை மாநகராட்சியில்‌ கொரோனா வைரஸ்‌ தடுப்புப்‌ பணிகள்‌ போர்க்கால அடிப்படையில்‌ சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிற கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கும்‌, அலுவலா்களுக்கும்‌ பாராட்டுக்கள்‌. தொடர்ந்து கொரோனா தடுப்பு பற்றி விழிப்புணர்வை மக்களிடையே மேற்கொள்ள வேண்டும்‌. கிருமிநாசினி மருந்து தெளிக்கும்‌ பணிகளையும்‌, தூய்மைப்‌ பணிகளையும்‌ அனைத்து பகுதிகளிலும்‌ தொடர்ந்து மேற்கொள்வதையும்‌, அனைவரும்‌ முகக்கவசம் அணிவதையும்‌, சமூக இடைவெளியையும்‌ கண்காணித்திட வேண்டும்‌. காவல்துறையினர்‌ சோதனைச்‌ சாவடிகளில்‌ கண்காணிப்பு பணிகளை விழிப்புடன் மேற்கொள்ள வேண்டும் என கள ஆய்வுக்குழு அலுவலாகள்‌ இயக்குநா புவியியல்‌ மற்றும்‌ சுரங்கத்துறை எ.சரவணவேல்ராஜ் இ.ஆ.ப., அவர்கள்‌, சிட்கோ மேலாண்மை இயக்குநர்‌ ஆர்‌.கஜலெட்சுமி இ.ஆ.ப., ஆகியோர்‌ தெரிவித்தார்.

இக்கூட்டத்தில்‌, மாவட்ட வருவாய்‌ அலுவலா்‌ (முத்திரைத்தாள்‌) ப.காந்திமதி, மாவட்ட வருவாய்‌ அலுவலா்‌ (கலால்‌) எம்‌.எஸ்‌.கலைவாணி அவர்கள்‌, நகர்‌ நல அலுவலர்‌ மரு.சந்தோஷ்குமார்‌, காவல்துறை உதவி ஆணையர்‌ ரமேஷ்பாபு அவர்கள்‌, துணை காவல்‌ கண்காணிப்பாளர்‌ என்‌.பிரேமானந்தன்‌, துணை இயக்குநர் (சுகாதாரம்‌) பிஅருணா, மண்டல உதவி ஆணையர்கள்‌ செந்தில்குமாரரத்தினம், டி.ஆர்‌.ரவி, மகேஷ்கனகராஜ்‌, ஏ.ஜே.செந்தில்‌அரசன்‌, ம.செல்வன்‌, உதவி நகர் நல அலுவலர்‌ வசந்த்‌ திவாகா்‌, ஒருங்கிணைப்பாளர்‌ தூய்மை பாரதம்‌ திருமால்‌, மக்கள்‌ தொடாபு அலுவலா்‌ ரெ.மதியழகன்‌ மற்றும்‌ அலுவலா்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...