கோவை: மதுவிலக்கு கொள்கையில் பாஜக உறுதியாக இருப்பதாகவும் மது இல்லாத சமூகத்தை உருவாக்க தமிழக முதல்வர் முனைப்பு காட்ட வேண்டும் என பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.
கோவை: மதுவிலக்கு கொள்கையில் பாஜக உறுதியாக இருப்பதாகவும் மது இல்லாத சமூகத்தை உருவாக்க தமிழக முதல்வர் முனைப்பு காட்ட வேண்டும் என பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.கட்சி அலுவலகத்தில் மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணியில் மாநில தலைவர் எல்.முருகன் வழிகாட்டுதலின் பேரில் தமிழகம் முழுவதும் பாஜகவினர் சிறப்பாக செய்து வருவதாகவும் கோவையில் 34 இடங்களில் 4,50,000 பேருக்கு உணவுகள் வழங்கி உள்ளதாகவும் 38,588 பேருக்கு மோடி கிட் கொடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
கொரோனா தொற்று பாதிப்பிற்கு பின் புதிய இந்தியாவைக் உருவாக்க வேண்டும் என்பதற்காக 20 லட்சம் கோடி நிதியை மோடி தலைமையிலான மத்திய அரசு ஒதுக்கியுள்ளது எனவும் அரசியல் கால்புணர்ச்சி காரணமாக எவ்வளவு எதிர்கருத்துகள் வந்தாலும் கூட இந்த 50 நாட்களில் எந்த வித பட்டினி சாவும் இந்தியாவில் நிகழவில்லை என்பதை நாம் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ஹைட்ரோகுளோரோகுயின் மாத்திரைகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இந்திய அரசு உதவி செய்துள்ளது எனவும் 20 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து எதிர்கட்சிகள் விமர்சனங்களுக்கு பிரதமர் முற்றுப் புள்ளி வைத்து உள்ளதாகவும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு மட்டும் தான் பாஜக உதவி செய்யும் என்ற எதிர் தரப்பினர் கருத்துகள் பொய்யாக்கப்பட்டு விட்டது எனவும் இந்த நிதி அறிவிப்புக்கு முன் எதிர்கட்சிகள் தரமற்ற விமர்சனங்களை முன் வைத்தனர் ஆனால், இந்த குற்றச்சாட்டெல்லாம் நடைமுறைபடுத்தும் போது தவிடுபொடியாக்கி விடும் என்று தெரிவித்தார்.
கொரோனா நிவாரண தொகையாக தமிழக அரசு பொதுமக்களின் கையில் 1000 ரூபாய் கொடுத்ததில் எங்களுக்கு உடன்பாடில்லை என்றவர், இதனை வங்கி கணக்கில் செலுத்தி இருக்கலாம் என தெரிவித்தார்.
மேலும், விழுப்புரத்தில் ஜெயஸ்ரீ இறப்பு சம்பவம் குறித்து விசாரிக்க பாஜகவினர் மனிதாபிமான அடிப்படையில் அங்கு சென்றதாகவும் அங்கு தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வில்லை என மாநில தலைவர் முருகன் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. இதையெல்லாம் கண்டு பாஜக அஞ்சாது எனவும் அவர் தெரிவித்தார்.