கோவையில் கொரோனா தாக்கம் இருந்த 23 பகுதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 3 பகுதிகள் இன்னும் 3 நாட்களில் விடுவிக்கப்படும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: கோவையில் கொரோனா தாக்கம் இருந்த 26 கட்டுப்பாட்டு பகுதிகளில் 23 பகுதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 3 பகுதிகள் இன்னும் 3 நாட்களில் விடுவிக்கப்படும் எனவும் கோவை கொரோனா இல்லா மாவட்டமாக மாற உழைத்த அனைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒத்துழைப்பு நல்கிய கோவை மக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.


கோவை: கோவையில் கொரோனா தாக்கம் இருந்த 26 கட்டுப்பாட்டு பகுதிகளில் 23 பகுதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 3 பகுதிகள் இன்னும் 3 நாட்களில் விடுவிக்கப்படும் எனவும் கோவை கொரோனா இல்லா மாவட்டமாக மாற உழைத்த அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் ஒத்துழைப்பு நல்கிய கோவை மக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், கொரோனா தடுப்பில் சென்னைக்கு அடுத்த படியாக கோவை இருந்தது. அதற்கு பிறகு முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் எடுத்த போர்க்கால நடவடிக்கையில் பேரில் தொற்று இல்லா மாவட்டமாக கோவை மாறியுள்ளது. இதற்கு உழைத்த அனைத்து பணியாளர்களுக்கும், ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

கோவை பச்சை மண்டலமாக மாறியுள்ள நிலையில் அதற்கு வழிகாட்டிய முதல்வருக்கு கோவை மக்கள் சார்பில் நன்றியைக் தெரிவித்து கொள்வதாகவும், தற்போது கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேருக்கு மட்டுமே கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கோவையில் இதுவரை 16.5 கோடி ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு கிடைத்துள்ளது. நிதி கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றும் வெளியில் வருபவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், கோவையில் கொரோனா தாக்கம் இருந்த 26 கட்டுப்பாட்டு பகுதிகளில் 23 பகுதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 3 பகுதிகள் இன்னும் 3 நாட்களில் விடுவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...