கோவை: கோவையில் 12 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை; நீட் தேர்வுக்கு தயாராக சொன்னதால் பரிதாப முடிவு.
கோவை: கோவையில் நீட் தேர்வுக்கு தயாராக சொல்லி தந்தை சொன்னதால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சரவணம்பட்டி ஜி.கே.எஸ் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாஸ்கர் (51). இவரது மூத்த மகன் சரண் பாலாஜி (19) 12ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் நிலையில் தந்தை பாஸ்கர் மகனை நீட் தேர்வு எழுத தயாராகும் படி கூறியுள்ளார்.
இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் சரண் பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தந்தை படிக்க சொல்லியதால் மனமுடைந்து மாணவன் தற்கொலை செய்து கொண்டது அங்குள்ள குடியிருப்பவர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.