கோவை: வால்பாறையில் இயங்கி வரும் அம்மா உணவகத்தை நகராட்சி ஆணையாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: வால்பாறையில் இயங்கி வரும் அம்மா உணவகத்தை நகராட்சி ஆணையாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி மூலம் அம்மா உணவகம் புதுமார்க்கெட் பகுதியில் இயங்கி வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசால் மக்களுக்கு மூன்று நேரம் அம்மா உணவகம் மூலம் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. வால்பாறையிலுள்ள அம்மா உணவகத்தின் மூலம் சுமார் 1500 பேர் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், வால்பாறை நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவன்ராஜ் திடீரென அம்மா உணவகத்தை பார்வையிட்டார். தொடர்ந்து மதிய உணவிற்காக தயாரிக்கப்படும் சாம்பார் சாதம் ஆகியவற்றை சோதனையிட்ட அவர், தரமான சுவையான உணவு வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து, அம்மா உணவகத்தில் சமூக விலக்கை கண்டிப்பாக கடை பிடிக்கவேண்டும், பணியாளர்களும் வரும் பயனாளர்களும் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வலியுறுத்த வேண்டும், அம்மா உணவக வளாகம் சுகாதாரமாக இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும், அடிக்கடி கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யவேண்டும் என்று பணியாளர்களிடம் அவர் அறிவுறுத்தினார்.