கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன் களப்பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்!

கோவை: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன் களப்பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி கோவையில் சிஐடியுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன் களப்பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி கோவையில் சிஐடியுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் பரவலை தடுக்க இந்தியாவில் பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொற்று நோய் தடுப்பு பணியில் மருத்துவர், செவிலியர், தூய்மை பணியாளர், காவலர், குடிநீர், மின்சாரம், ஊடகவியலாளர்கள் என முன் களப்பணியாளர்கள் சுற்றிசுழன்றி பணியாற்றி வருகின்றனர்.

ஆனால், இவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. இதன் காரணமாக இப்பணியில் ஈடுபட்டுள்ள முன் களப்பணியாளர்கள் ஏராளமானோர் கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் மரணமடைந்தும் உள்ளனர்.

இதனையடுத்து, இப்பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து சிஐடியுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை காட்டூர் சிஐடியு மாவட்டக்குழு அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கே.மனோகரன், ரத்தினகுமார், ஏ.எல்.ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...