வால்பாறை பழங்குடியின மக்களுக்கு சி.எஸ்.ஐ பழங்குடிகள் துறை சார்பாக நிவாரண உதவிகள் விநியோகம்!

கோவை: வால்பாறை பழங்குடியின மக்களுக்கு சி.எஸ்.ஐ பழங்குடிகள் துறை சார்பாக நிவாரண உதவிகள் விநியோகம் செய்யப்பட்டது.

கோவை: வால்பாறை பழங்குடியின மக்களுக்கு சி.எஸ்.ஐ பழங்குடிகள் துறை சார்பாக நிவாரண உதவிகள் விநியோகம் செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் அடர்ந்த வனப்பகுதியில் 16க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் காடர், புலையர், முதுவர், இருளர் இன மக்கள் சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர்.

கொரானா ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பழங்குடியின மக்களுக்கு வால்பாறை சி.எஸ்.ஐ திருச்சபை மற்றும் திருச்சி தஞ்சை திருமண்டலத்தில் செயல்பட்டு வரும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிகள் துறை சார்பாக 100 பழங்குடியினர் குடும்பங்களுக்கு சமையல் தொகுப்புகள் வழங்கப்பட்டது.

துறைத் தலைவர் மற்றும் பேராயர் சந்திரசேகரன் மற்றும் பொறுப்பாளர் ஆயர் சுதார்சன் ஆகியோர் பழங்குடியின மக்களுக்கு உதவிகள் வழங்க உத்தரவிட்டதையடுத்து, 100 குடும்பங்களுக்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிகள் துறை இயக்குநர் ஆயர் ஜான்பிரபு நிவாரண பொருட்களை, மறைமாவட்ட தலைவர் ஆயர் ஜெயராஜ் தலைமையில் வனத்துறையுடன் இணைந்து வழங்கினார்.

முதல் கட்டமாக கூமாட்டி மற்றும் பாலகிணார் மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஆனைமலை மறை மாவட்ட பெண்கள் ஐக்கிய சங்க தலைவர் எலிசபெத் ரெனா, மானாம்பள்ளி வனவர் விஷ்ணு, நிர்வாகிகள் ஜெபராஜ், குமார், ஜேஸ்பர், எழில் ஜெப்ரி, வனத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...