திருப்பூர்: ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்பட்டாலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆகியிருக்கும் சூழலில் நடிகர், நடிகைகள் முகங்கள் பதிந்த பிரிண்டடு மாஸ்க் போன்ற முகக்கவசத்தில் புதுமையை புகுத்தும் முயற்சியில் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
திருப்பூர்: ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்பட்டாலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆகியிருக்கும் சூழலில் நடிகர், நடிகைகள் முகங்கள் பதிந்த பிரிண்டடு மாஸ்க் போன்ற முகக்கவசத்தில் புதுமையை புகுத்தும் முயற்சியில் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிற 17ம் தேதி வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கினால் திருப்பூரில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் மூடப்பட்டன.
இந்த நிலையில், கடந்த 6ம் தேதி முதல் 50 சதவீத ஊழியர்களுடன் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் பணி நிறுவனங்கள் செயல்பட தொடங்கி உள்ளது. இந்த காலகட்டத்தில் மருத்துவ ஆடைகள் தயாரிப்பில் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகிறது. மருத்துவர்களுக்கு தேவையான முழு கவச உடை மற்றும் முக கவசங்கள் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் தயாரித்து அவற்றை தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வருகின்றனர்.
தற்பொழுது ஊரடங்கு சிறிது சிறிதாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் முக கவசம் அணிவது என்பது கட்டாயமான ஒன்றாக இருந்து வருகிறது.
ஊரடங்கு முழுவதும் தளர்த்தப்பட்டாலும், மாஸ்க் அணிவது நிச்சயம் சில காலங்களுக்கு கட்டாயமாக இருக்கும் என்பதனால் பல்வேறு நிறுவனங்கள் மாஸ்க் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இதில், செண்ட்டியல் என்ற பின்னலாடை நிறுவனம் மாஸ்க்கில் புதுமையை புகுத்தியுள்ளது.
துணிகளால் ஆன முகக்கவசங்களில் நடிகர், நடிகைகள் முகங்கள் பதிந்த மாஸ்க் பரவலாக அறியப்பட்ட சினிமா வசனங்கள், இளைஞர்களை ஈர்க்கும் குறியீடுகள் பதிந்த மாஸ்க்குகளை தயாரிக்கும் பணியை துவக்கியுள்ளது.
சந்தைகளில் இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, இதனை தயாரிக்கும் மடங்கை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பின்னலாடை நிறுவனத்தினர் தெரிவித்தனர்.